சமுதாய முன்னேற்ற அடிப்படைத் திறன் வளர்த்தல் முகாம்

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் இருந்து 08.11.2017 புதன்கிழமை அன்று கல்வியியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர்.திருமதி.வி.அகிலா ரூபி சாந்தகுமாரி அவர்கள் தலைமையில் சமுதாய முன்னேற்ற அடிப்படைத் திறன் வளர்த்தல் முகாம் அறிவியல் வேளாண்மை மையத்தில் வைத்து நடைபெற்றது.
இம்முகாமில் அறிவியல் வேளாண்மை மையத்தின் தலைவர் முனைவர். சினிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்கத்தின் சிறப்புகள் பற்றியும் பயிர் செய்யும் முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார்கள். இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள் மற்றும் இயற்கையின் மூலம் தயார் செய்யும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள். அதற்கு பிறகு மரம் நடும் விழா நடைபெற்றது. எம் கல்வியியில் கல்வி ஆசிரிய மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இயற்கையை நேசிக்கவும், இயற்கையினால் வேளாண்மை செய்யும் பயிர்களின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைந்தார்கள். இம்முகாமின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு தேவைப்படும் திறன்களை பெற்றதோடு இயற்கையாக அதுவும் இயற்கை உணவு பொருட்களை நாமும் பயிர் செய்வோம் என்ற உயரிய நோக்கோடு செயல்படுவோம் என்று உறுதியளித்து மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். எம் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.